கவர் ஸ்டோரி

மோடி

தேர்தலின்போது மட்டுமே செய்திகளில் அடிபடும் தேர்தல் ஆணையம், இப்போது தினம் தினம் தவறான காரணங்களால் தலைப்புச் செய்தியாகிறது. மிக முக்கியமான இரண்டு அரசியல் பிரச்னைகள், தேர்தல் ஆணையத்தின் நடுநிலையை சந்தேகத்துக்குரியதாக மாற்றியுள்ளன. ஒன்று, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம். இரண்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள ‘வாக்குத் திருட்டு’ விவகாரம்.

பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆரம்பம் முதலே சர்ச்சையில் சிக்கிவருகிறது. ஜனவரியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தலுக்கான எல்லா ஆயத்தங்களையும் செய்துவந்த நேரத்தில், திடீரென இதைச் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்ற கேள்விக்கே தேர்தல் ஆணையம் இன்னும் பதில் சொல்லவில்லை.

Leave a comment